போலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட் | Nakkhul gets refund from Flipkart

0
7

ஃப்ளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நகுல் – வைரல் வீடியோ

சென்னை: ஃப்ளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நடிகர் நகுலின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் நகுல் தனது 3வது திருமண நாளுக்கு மனைவிக்கு பரிசளிக்க ஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சத்திற்கு ஐபோன் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு போலி போன் வந்தது.

Nakkhul gets refund from Flipkart

இதையடுத்து ஃப்ளிப்கார்டில் புகார் செய்த அவர் இது குறித்து சமூக வலைதளத்திலும் தெரிவித்திருந்தார். அவரின் புகாரை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கும் இது போன்று நடந்துள்ளது சார் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் நகுலிடம் இருந்து போலி போனை வாங்கிக் கொண்ட ஃப்ளிப்கார்ட் அவருக்கு பணத்தை வாபஸ் கொடுத்துள்ளது. இதை வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார் நகுல்.

தனக்கு பணம் கிடைத்த போதிலும் தன்னை போன்று ஏமாந்த பலருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்கிறார் நகுல். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெரிய நிலைக்கு வர வேண்டும். நிறைய பேர் உங்களின் உதவியை நாடியுள்ளனர். அந்த வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்து நம்பர் ஒன் இந்திய நிறுவனமாக இருக்கவும் என்று நகுல் தெரிவித்துள்ளார்.From As Seen on Filmbeat
The entire right of this article is with Filmbeat. Tamilyogi doesn’t own any of these content and is automatically syndicated from Filmbeat RSS.