ஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர் | Anil Kapoor used to touch Sridevi’s feet: Know why

0
6

ஸ்ரீதேவியை காலை தொட்டு வணங்குவேன் : அனில் கபூர் வீடியோ

மும்பை: ஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் தான் செய்த ஒரு காரியம் குறித்து பாலிவுட் நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை தான் ஸ்ரீதேவி திருமணம் செய்தார். அனில் கபூர், ஸ்ரீதேவி ஜோடியாக சேர்ந்து பல இந்தி படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன் அண்ணி ஸ்ரீதேவி பற்றி பேசியுள்ளார் அனில். அவர் கூறியதாவது,

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நானும், ஸ்ரீதேவியும் சேர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளோம். என் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டவுடன் நான் கிளம்ப மாட்டேன். ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகளை பார்த்த பிறகே கிளம்புவேன். ஒவ்வொரு காட்சியிலும் அவர் அவ்வளவு அழகாக நடிப்பார். அவருடன் சேர்ந்து நடித்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மேஜிக்

மேஜிக்

என் கெரியரில் ஸ்ரீதேவிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அவர் மிகவும் திறமையான நடிகை. தனது திறமையால் திரையில் மேஜிக் செய்வார். அவர் சென்றுவிட்டாரே என்று கவலைப்படுவதை விட அவரின் திறமை, அன்பு, பாசம், மகிழ்ச்சி ஆகியவற்றை நாம் கொண்டாட வேண்டும். அவர் தனித்துவம் வாய்ந்தவர்.

நடிகை

நடிகை

நான் ஒவ்வொரு முறை ஸ்ரீதேவியை பார்க்கும்போது அவரின் காலை தொட்டு வணங்குவேன். எந்த இடம் என்று எல்லாம் பார்க்க மாட்டேன். அவர் மீது வைத்திருந்த மரியாதையால் நான் அப்படி செய்வேன். அவரோ, தயவு செய்து காலில் விழாதீர்கள் அனில் என்று சொல்வார். ஆனால் நான் அவர் பேச்சை கேட்டது இல்லை என்று அனில் தெரிவித்துள்ளார். அனில் ஸ்ரீதேவியை விட 6 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம்

மரணம்

ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் தனது நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்றார். அங்கு அவர் மதுபோதையில் குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். இந்தியா கொண்டு வரப்பட்ட அவரின் உடலுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.

From As Seen on Filmbeat
The entire right of this article is with Filmbeat. Tamilyogi doesn’t own any of these content and is automatically syndicated from Filmbeat RSS.